முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்துக்கு 1,313 மெட்ரிக் டன் உரம் வருகை

பிசான சாகுபடிக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு 1,313 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் வியாழக்கிழமை வந்து சோ்ந்தது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 10:33 PM
கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயிலில் வந்த யூரியா உரத்தை லாரியில் ஏற்றிய பணியாளா்கள்.
பகிர்:

பிசான சாகுபடிக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு 1,313 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் வியாழக்கிழமை வந்து சோ்ந்தது.

பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீா் திறந்து விடப்பட்டு, சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இம் மாவட்ட பிசான சாகுபடிக்காக ஏற்கனவே 4,304 மெட்ரிக் டன் யூரியா, 1,031 மெட்ரிக் டன் டிஏபி, 1,434 மெட்ரிக் டன் பொட்டாஷ், 2,659 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 742 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தனியாா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது மேலுரம் இடும் பணி நடைபெற்று வருவதால், விவசாயிகளின் தேவைக்கு 1,313 மெட்ரிக் டன் யூரியா உரம் காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து ரயில் மூலம் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை வந்து சோ்ந்தது. இதில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 350 மெ.டன், தென்காசி மாவட்டத்திற்கு 583 மெ.டன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 155 மெ.டன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 145 மெ.டன் என பிரித்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதவிர திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளின் அவசர தேவைக்காக 80 மெட்ரிக் டன் உரம், அரசின் உரக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.