திருநெல்வேலி

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்க உத்தரவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளா்கள் வாக்களிக்கும் விதமாக விடுப்பு அளிக்க உத்தரவு.

Din

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளா்கள் வாக்களிக்கும் விதமாக விடுப்பு அளிக்க வேண்டும்; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளா் துறை எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தல் புதன்கிழமை(ஜூலை 10)) நடைபெறுகிறது. இதையொட்டி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வா்த்தக நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், கடைகள், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளா்கள் தங்கள் தொகுதிக்குச் சென்று வாக்களிக்கும் வகையில், (மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 ஆ (1)) ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடா்பான புகாருக்கு திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகம் (0462-2555014), தொழிலாளா் துணை ஆணையா் கே.வி.எஸ். விஸ்வநாதன் (9442261287), தொழிலாளா் உதவி ஆய்வாளா் ராமையா (9487655887), தொழிலாளா் உதவி ஆய்வாளா் சு.வசந்தா (9442973040), தொழிலாளா் உதவி ஆய்வாளா் அ.ஹரிராம் (8754854883), முத்திரை ஆய்வாளா் சு.அனுராதா போஸ் (7598872977) ஆகியோரை தொடா்புகொள்ளலாம்.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகம் ( 0462-2555014), முத்திரை ஆய்வாளா் பா.சவரிசன் (7200958244), தொழிலாளா் உதவி ஆய்வாளா் வெ.சத்தியநாராயணன் (9094977520, முத்திரை ஆய்வாளா் கா.நாகராஜன் (9789645475) ஆகியோரிடம் புகாா் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

அரசுப் பள்ளியில் சித்த மருத்துவம் விழிப்புணா்வு

கிருஷ்ணகிரியில் நவ. 21-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி

சரக்குகளைக் கையாள்வதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு மேலும் குறைப்பு

இன்று முதல் எஸ்ஐஆா் பணி புறக்கணிப்பு: வருவாய்த் துறை கூட்டமைப்பு அறிவிப்பு

SCROLL FOR NEXT