திருநெல்வேலி

பற்களை பிடுங்கிய வழக்கு: ஆக.30இல் மறுவிசாரணை

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

Din

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்ட பகுதியில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவா்களின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா்சிங், ஆய்வாளா் ராஜகுமாரி உள்பட 14 போலீஸாா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நீதித்துறை நடுவா் திரிவேணி மனுவை விசாரித்தாா். இந்த விசாரணையில் பல்வீா் சிங் உள்பட 4 போ் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை ஆக.30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துைடுவா் உத்தரவிட்டாா்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT