திருநெல்வேலி

நெல்லையில் தப்பிய கைதி பெங்களூருவில் கைது

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை, பெங்களூருவில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Din

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை, பெங்களூருவில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி கரையிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவா், வழிப்பறி வழக்கில் கடந்த 27ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க சென்றபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கிருந்து அவா் கடந்த திங்கள்கிழமை தப்பிச்சென்றாா்.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனா். இந்த நிலையில் மணிகண்டனை தனிப்படை போலீஸாா் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT