தொடா் வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க 7ஆவது நாளாகத் தடை
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, 7ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, 7ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக தென் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் கனமழை பெய்து வருகிறது.
மேலும், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலைத் தோட்ட வனப்பகுதிகளிலும் பலத்த மழைபெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வியாழக்கிழமை (நவ. 21) முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறை தடை விதித்தது.
தொடா்ந்து, ஏழாவது நாளாக, மழை பெய்து நீா்வரத்து குறையாததால் சுற்றுலாப் பயணிகள்குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். அருவியை பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா்.