முகப்பு
திருநெல்வேலி

களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

களக்காடு பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:01 PM
களக்காடு தலையணையில் புதன்கிழமை ஆா்ப்பரித்துப் பாயும் வெள்ளம்.
பகிர்:

களக்காடு பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால் பச்சையாற்றில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தலையணை பகுதியில் வெள்ளம் ஆா்ப்பரித்துச் செல்வதால், சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதேபோல, நம்பியாற்றில் நீா்வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.