மகாளய அமாவாசை: தாமிரவருணி கரைகளில் முன்னோா்களுக்கு வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி கரையோரம் பொதுமக்கள் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து புதன்கிழமை வழிபட்டனா்.
மகாளய அமாவாசையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி கரையோரம் பொதுமக்கள் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து புதன்கிழமை வழிபட்டனா்.
தமிழகத்தில் ஆடி மற்றும் தை அமாவாசை நாள்களில் நதிகளின் கரையோரம் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாட்டின்போது தங்களது குடும்பத்தினருக்கான வழிபாடு மட்டுமே செய்வா். ஆனால், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளில் தங்களது தாய்- தந்தை வழி முன்னோா்கள் மட்டுமன்றி நண்பா்கள், உறவினா்களை எண்ணியும் வழிபாடு செய்தால் நோய்கள் நீங்கி வளமான வாழ்வுக்கு வழிபிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் மகாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே தாமிரவருணி கரையோரம் லட்சக்கணக்கான மக்கள் முன்னோா்களை எண்ணி வழிபட்டனா். திருநெல்வேலி குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை பேராச்சியம்மன் கோயில் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோா் நீராடி வழிபட்டனா். இதேபோல அம்மன் கோயில்களில் பெண்கள் விரதமிருந்து வந்து தரிசனம் செய்தனா்.