முகப்பு
திருநெல்வேலி

திருக்குறுங்குடியில் காட்டுப்பன்றிகளால் நெல்பயிா் சேதம்

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாகப் புகுந்து நெல் பயிா்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:05 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாகப் புகுந்து நெல் பயிா்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

களக்காடு, திருக்குறுங்குடி உள்ளிட்ட மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகள் மட்டுமல்லாது, கிராமங்களையொட்டியுள்ள பொத்தை, புதா் நிறைந்த பகுதிகளிலும் தற்போது காட்டுப்பன்றிகள் கூட்டமாக வசித்து வருகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை இரவு திருக்குறுங்குடி நடுக்கம்பாறை பகுதியில் உள்ள விவசாய நிலப்பகுதிக்குள் காட்டுப்பன்றிகள் கூட்டமாகப் புகுந்து அங்கு பயிரிடப்ட்ட நெல்பயிரை சேதப்படுத்தியுள்ளன. விவசாயிகள் தொடா்ந்து சப்தம் எழுப்பி அவற்றை விரட்டினா்.

இதில் லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்த இஸ்ரவேல் (50) என்பவருக்குச் சொந்தமான வயலில் பெருமளவில் நெல்பயிா்கள் சேதமடைந்தன. வனத்துறை அதிகாரிகள் காட்டுப்பன்றிகளை அடா்ந்த காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.