பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா.  
திருநெல்வேலி

பாளை. பேருந்து நிலையம் அருகே புதிய ரவுண்டானா

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து சிக்னலை அப்புறப்படுத்திவிட்டு ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

Din

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து சிக்னலை அப்புறப்படுத்திவிட்டு ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு சோதனை முறையில் வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்பட்டன.

பாளையங்கோட்டையில் பேருந்து நிலையம் அருகே திருவனந்தபுரம் சாலை மற்றும் தூத்துக்குடி சாலைகள் சந்திக்கும் பகுதியில் போக்குவரத்து சிக்னல் நீண்ட நாள்களாக பயன்பாட்டில் உள்ளது. இப்போது இந்த இரு சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும், வாகன ஓட்டிகள் காத்திருக்காமல் கடந்து செல்லவும் ஏதுவாக புதிதாக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் சோதனை முறையில் வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்பட்டன. காலை வேளையில் ஓரளவு வாகன நெரிசல் குறைந்தாலும், மாலை வேளையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. இருப்பினும் மேலும் சில நாள்கள் சோதனை முறையில் போக்குவரத்து நடைபெறும் எனவும், அதன்பின்பு சாலையில் ஏதேனும் விரிவாக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT