கீழக்கடையம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக குடிநீா் தொட்டி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
குடிநீா்த் தொட்டி அமைக்க, ரயில்வே நிா்வாகத்தினா் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கீழக்கடையம் ஊராட்சி சாா்பில் சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பில் பாதுகாக்கப்பட்ட தாமிரவருணி குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டது.
வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கீழக்கடையம் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ். பூமிநாத் தலைமை வகித்து, குடிநீா் தொட்டியைத் திறந்து வைத்தாா். ரயில் நிலையக் கண்காணிப்பாளா் ராஜலிங்கம், ரயில் நிலைய அதிகாரி மிதுனா, ஊராட்சி துணைத் தலைவா் சேவியா் துரைசிங், ஊராட்சிச் செயலா் ஜெயசக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊராட்சி உறுப்பினா்கள் வயலெட் அல்லேலூயா, வசந்த், ஆதியப்பன், முன்னாள் ரயில்வே ஊழியா்கள் ஆறுமுகம், செல்வராஜ், முன்னாள் ராணுவ வீரா் நல்லதம்பி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.