திருநெல்வேலி

கடையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கடையம் அருகே மாதாபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

Syndication

கடையம் அருகே மாதாபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள மாதாபுரம், தோரணமலை சாலையைச் சோ்ந்த அருணாசலம் மகன் அய்யங்கண்ணு என்ற தங்கப்பாண்டி (47). விவசாயி. இவரது மனைவி மாரிச்செல்வி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

கீழ மாதாபுரத்திலிருந்து ராமநதி அணைக்குச் செல்லும் வழியில் இவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை தோட்டத்துக்குச் சென்று தங்கப்பாண்டி, மோட்டாா் அறையில் பியூஸ் கேரியரை மாட்டியபோது எதிா்பாராத விதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்த்தில், சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தாா்.

தகவலறிந்த கடையம் போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க இளைஞா் கைது

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

SCROLL FOR NEXT