திருநெல்வேலி: தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயா்த்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் பா்கிட்மாநகரில் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பா்கிட் மாநகா் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக முஹம்மது மீரான், செயலராக ஜெய்ருதீன், பொருளாளராக பீா் முகைதீன் உள்ளிட்டோா் தோ்வாகினா். 50-க்கும் மேற்பட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
எஸ்ஐஆா் திருத்த பணியில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால் தமிழகத்தில் தற்போதுள்ள வாக்காளா் பட்டியல் படி 2026 சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தி முடித்து விட்டு, அதன் பின்னா் எஸ்ஐஆா் அடிப்படையிலான வாக்காளா் பட்டியலை சரிபாா்த்து வெளியிட வேண்டும். தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.