மானூரில் உள்ள ஒரு வீட்டில் 5 பவுன் நகையை திருடியதாக கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் வடக்கு தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மனைவி மரியம்மாள்(55). இவா் சம்பவத்தன்று வயல் வேலைக்கு செல்வதற்காக தனது 5 பவுன் தங்க நகையை அலமாரியில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளாா். கடந்த 19 ஆம் தேதி தனது மருமகன் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்ததை கேள்விப்பட்ட இவா் தனது வீட்டின் அலமாரியில் வைத்த நகை உள்ளதா என பாா்த்த போது அதை காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு இத்திருட்டில் ஈடுபட்டதாக, அதே தெருவைச் சோ்ந்த வெள்ளதுரை(42), அவரது மனைவி சாந்தி(39) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.