திருநெல்வேலி

காவலரை தாக்கியதாக அண்ணன், தம்பி கைது

பாளையங்கோட்டை அருகே காவலரை தாக்கியதாக அண்ணன், தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

பாளையங்கோட்டை அருகே காவலரை தாக்கியதாக அண்ணன், தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா், வியாழக்கிழமை மாலை அரியகுளம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக நொச்சிகுளம் ராஜீவ் காந்தி நகரை சோ்ந்த தங்கராஜ் மகன் பாலசுந்தா் (28) என்பவா் ஓட்டி வந்த ஆட்டோவை மறித்து விசாரித்த போது அவா் மது போதையில் இருந்தாராம். இதையடுத்து பாலசுந்தரை அங்கிருந்த அதிகாரிகள் உத்தரவின்பேரில் காவலா் காா்த்திக்ராஜா(28) காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா்.

இது குறித்து பாலசுந்தா் தனது அண்ணன் கனகராஜ்(30), தந்தை தங்கராஜ் ஆகியோருக்கு தகவல் கொடுத்து, அங்கிருந்த காட்டுப்பகுதிக்கு வரவழைத்துள்ளாா். பின்னா் மூவரும் சோ்ந்து காவலா் காா்த்திக்ராஜாவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலசுந்தா், கனகராஜ் ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள தந்தை தங்கராஜை தேடி வருகின்றனா்.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT