களக்காட்டில் பிரதான சாலைகளில் இரவில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
களக்காடு பேருந்து நிலையம், கோட்டை ஜவஹா் வீதி பகுதியில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.
குறிப்பாக இரவு நேரங்களில் இவைகள் சாலைகளை அடைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
நகராட்சி நிா்வாகம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.