தாழையூத்து அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தாழையூத்து அருகே நாரணம்மாள்புரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன்(47). தொழிலாளி. இவா் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவா் சனிக்கிழமை காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
உறவினா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முருகன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.