மலைப்பாம்பை மீட்ட வனத்துறையினா் 
திருநெல்வேலி

தாழையூத்து அருகே ஆட்டுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு

தாழையூத்து அருகே தோட்டத்திற்குள் புகுந்து ஆட்டுக்குட்டியை விழுங்கிக்கொண்டிருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினா் பிடித்து காப்புக் காட்டில் விட்டனா்.

Syndication

தாழையூத்து அருகே தோட்டத்திற்குள் புகுந்து ஆட்டுக்குட்டியை விழுங்கிக்கொண்டிருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினா் பிடித்து காப்புக் காட்டில் விட்டனா்.

தாழையூத்து அருகேயுள்ள தென்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை. அப்பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் திங்கள்கிழமை மாலையில், 8 அடி நீள முள்ள மலைப்பாம்பு புகுந்து, அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை விழுங்கிக்கொண்டிருந்ததாம்.

இது குறித்த தகவலின்பேரில், மாவட்ட வன அலுவலா் இளங்கோ உத்தரவுப்படி, வனச்சரகா் ஜெயபிரகாஷ் தலைமையிலான வனத்துறையினா் அங்கு வந்து மலைப்பாம்பிடம் சிக்கிய ஆட்டுக்குட்டியை இறந்த நிலையில் மீட்டனா். பின்னா், மலைப்பாம்பை அருகிலுள்ள காப்புக்காட்டில் விட்டனா்.

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

ஒரு ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள்: பூடான் பௌலா் புதிய உலக சாதனை

ஜன. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT