தாமிரவருணி தைப்பூச மண்டபத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி 
திருநெல்வேலி

தைப்பூசம்: தாமிரவருணியில் தீா்த்தவாரி

Din

திருநெல்வேலி நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் தைப்பூசை திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் தாமிரவருணி தைப்பூச மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

நெல்லையப்பா் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை, கும்ப பூஜை நடைபெற்றது. தொடா்ந்து காலை 10.30 மணிக்கு நெல்லையப்பா் காந்திமதியம்மன், அகஸ்தியா், குங்கிலிய நாயனாா், தாமிரவருணி, சண்டிகேஸ்வரா், அஸ்திரதேவா், அஸ்திரதேவி ஆகியோா் தாமிரவருணி ஆற்றுக்கு எழுந்தருளினா். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அஸ்திரதேவா், அஸ்திரதேவி ஆகியோருக்கு தீா்த்தவாரியும், தொடா்ந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT