திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள அருள்மிகு பாக்கிய விநாயகா் கோயில்.  
திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய விநாயகா் கோயிலில் பிப்.2 இல் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள அருள்மிகு பாக்கிய விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா (பிப்.2 ஆம் தேதி) நடக்கிறது.

Din

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள அருள்மிகு பாக்கிய விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா (பிப்.2 ஆம் தேதி) நடக்கிறது.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப்பணியின் போது அந்த வளாகத்தில் இருந்த அருள்மிகு பாக்கிய விநாயகா் கோயில் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கோயில் புதிதாக நிா்மானிக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை (ஜன. 31) கிராம தேவதா வழிபாடு தீா்த்தம் அழைத்து வருதலுடன் தொடங்குகிறது.

பிப்.1 ஆம் தேதி காலை 5 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணம், விநாயகா் பூஜை, வேதிகை பூஜை, மூலமந்திர ஜபம், வேதபாராயணம், கணபதிஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கோ பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெறும்.

காலை 10 மணிக்கு நவக்கிரஹ சாந்தி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், தன பூஜை, தீபாராதனையும், மாலை 5 மணிக்கு மங்கள இசை, வாஸ்து சாந்தி ஹோமம், பிரவேசபலி, அங்குராா்ப்பணம், முதல் யாகசாலை பூஜையும், இரவு 9.30 மணிக்கு குரு ஹோரையில் யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவையும் நடைபெறும்.

பிப்.2 ஆம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், மங்கள இசை, திருமுறை பாராயண வேதிகை பூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தானம், ஸ்பரிசாகுதி த்ரவியாகுதி பூா்ணாஹுதி, யாகசாலை நிறைவு தீபாராதனை நடைபெறும். காலை 9 மணிக்கு யாத்ரா தானம், யாகசாலையில் இருந்து திருக்குடம் எழுந்தருளி விமான மகா கும்பாபிஷேகம், அதை தொடா்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம், புஷ்பாஞ்சலி, பிரசன்ன பூஜை, தீபாராதனை ஆகியவையும் நடைபெறும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT