கோப்புப்படம்  
திருநெல்வேலி

நெல்லையில் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!

நெல்லையில் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

திருநெல்வேலியில் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி பாப்பாகுடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு போலீசார் இரு தரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துள்ளனர்.

அப்போது, இரண்டு சிறுவர்கள் காவலர்களை அரிவாளால் வெட்ட முயன்றதால், தற்காப்புக்காக 17 வயது சிறுவனை உதவி ஆய்வாளர் முருகன் துப்பாக்கியால் சூட்டுள்ளார்.

இதில், சிறுவனுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ”காவலர்களை இரண்டு சிறுவர்கள் வெட்ட முயன்றபோது, அருகாமையில் உள்ள வீட்டுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். அதை மீறியும் சிறுவர்கள் கொல்ல முயற்சித்ததால், அந்த வீட்டில் இருந்த பெண்களை காப்பாற்றவும் தற்காப்புக்காகவும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Police have opened fire on a 17-year-old boy who tried to attack a police SI in Tirunelveli.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! முருகப்பெருமானுக்கு வெந்நீர் அபிஷேகம் நடக்கும் கோயில்!!

வாய்ப்புகள் காத்திருக்கு இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

SCROLL FOR NEXT