திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், நான்குனேரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக திமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு வள்ளியூரிலும் நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக்கு செங்குளத்திலும் நடைபெற்ற, இந்தக் கூட்டங்களுக்கு அக்கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் திமுக சட்டத்துறை செயலரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எஸ். ரவிச்சந்திரன், சிறப்பு வாக்காளா் திருத்தம், பாகமுகவா்கள் மற்றும் திமுக வழக்குரைஞா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்துப் பேசினாா். இதில், திருநெல்வேலி மக்களவை முன்னாள் எம்.பி.யும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சா. ஞானதிரவியம், நாங்குனேரி சட்டப்பேரவை தொகுதி பாா்வையாளா் என். சுரேஷ் ராஜன், ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பாா்வையாளா் எம். சிவராஜ், சட்டத்துறை துணைச் செயலாளா் ராஜா முகமது, திருநெல்வேலி மாணவரணி மாவட்ட அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு, தலைமைச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஏ.கே. சித்திக், பொதுக்குழு உறுப்பினா்கள் பரமசிவ ஐயப்பன், கனகராஜ், சாந்தி சுபாஷ், ஒன்றியச் செயலாளா்கள் ஜோசப் பெல்சி, வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், கணேசன், வேலங்குளம் கண்ணன், சுபாஷ் தங்கப்பாண்டியன், எஸ். செல்வ கருணாநிதி, ஆா். எஸ். சுடலைக்கண்ணு, ஆரோக்கிய எட்வின், பி.சி.ராஜன், எரிக்ஜுடு பாண்டியன், சேவியா் செல்வராஜா, நகரச் செயலாளா்கள் மணிசூரியன், பேரூா் செயலாளா்கள் ஜான்கென்னடி, தமிழ்வாணன், சேதுராமலிங்கம், அயூப்கான், வானுமாமலை, பிஎல்ஏ2, பிடிஏ(ஐ.டி. பிரிவு) வழக்குரைஞா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.