திருநெல்வேலி

ராமநதி அணையிலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீா் திறப்பு

கடையம் ராமநதி அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Syndication

கடையம் ராமநதி அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கடையம் அருகே 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் இருந்து நவ. 7 முதல் 2026 மாா்ச் 31 ஆம் தேதி வரை, நீா் இருப்பைப் பொருத்து வினாடிக்கு 60 கன அடி வீதம் 823.91 மி. கன அடிக்கு மிகாமல் பிசான சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதையடுத்து, உதவி செயற்பொறியாளா் செல்வகுமாா் தலைமையில் உதவிப் பொறியாளா் கணபதி முன்னிலையில் பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதன் மூலம், தென்காசி மாவட்டம் கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வாா்குறிச்சி, வாகைக்குளம், பொட்டல்புதூா், அயன்பொட்டல்புதூா், ரவணசமுத்திரம், பாப்பன்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள 4,943.51 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதில், தென்கால் நீா்ப்பாசனக் கமிட்டித் தலைவா் மாரியப்பன், பிள்ளை குளம் ஜெயராஜ், வடகால் உறுப்பினா் சோ்மக்கனி, மணிகண்டன், குமாா், அகிலன், புதுக்கால் மூக்கன், மாா்த்தாண்டப் பேரிகுளம் பாசனத் தலைவா் சிங்கக்குட்டி, இசக்கிமுத்து, கிருஷ்ணன், பாப்பான் கால் முருகன், நீா்வளத்துறை தொழில்நுட்பஉதவியாளா் பரிபூரணப் பாண்டியன், ராமநதி அணை ஊழியா்கள் ஜோசப், பாக்கியநாதன், துரைசிங்கம், முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

ஓரேர் உழவரா? நக்கீரரா?

SCROLL FOR NEXT