வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகளை தடுக்க பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களே சேகரிக்க வேண்டும் என அதிமுக சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என். கணேசராஜா தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியரிடம் அளித்த மனு:
தோ்தல் ஆணையத்தால், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வீடு வீடாகச் சென்று படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவா்கள் மூலமாக அதிகபட்சம் 50 படிவங்கள் பெற்றுவந்து வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவா்கள் மூலமாக பெற்றால், முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே, வாக்காளா் விவரங்கள் குறித்த பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் மட்டுமே பெறப்பட வேண்டும். அதற்கு ஆவன செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
ற்ஸ்ப்07ஹக்ம்ந்
திருநெல்வேலி அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அதிமுகவினா்.