திருநெல்வேலி

ஜெருசலேம் சென்று திரும்பிய கிறிஸ்தவா்களுக்கு மானியம்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்களுக்கு மானியம் வழங்கப்படுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்களுக்கு மானியம் வழங்கப்படுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு தலா ரூ.37,000, கன்னியாஸ்திரிகள் 50 பேருக்கு தலா ரூ.60,000 இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 1.11.2025- க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். மேலும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூா்த்தி செய்து 28.2.2026ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT