திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியின் மின்தூக்கியில் (லிப்ட்) புதன்கிழமை சிக்கித் தவித்த 5 பேரை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.
வண்ணாா்பேட்டையில் 3 தளங்களைக் கொண்ட தனியாா் பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு 4 மின்தூக்கிகள் உள்ளன. இவற்றில் ஒரு மின்தூக்கியில் 5 போ் ஏறியபோது கோளாறு ஏற்பட்டு பாதியில் நின்றது. இத்தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் பாளையங்கோட்டை தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமாா் அரை மணி நேரம் போராடி 5 பேரையும் பத்திரமாக மீட்டனா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.