தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால் திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ.1.55 கோடி அபராதம் விதிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரவருணி நதியில் சுத்திகரிக்காத கழிவு நீரை தொடா்ந்து மாநகராட்சி நிா்வாகம் வெளியேற்றுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தாழையூத்தைச் சோ்ந்த எஸ்.பி.முத்துராமன் புகாா் அளித்திருந்தாா்.
இந்த புகாா் குறித்து விசாரித்த திருநெல்வேலி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நீா் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் , சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் மாநகராட்சி ஆணையருக்கு தேவையான உத்தரவுகளை வழங்கிடவும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2025 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பால் ஏற்பட்ட மாசுக்கு ரூ.1 கோடி 55 லட்சம் சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கவும் பரிந்துரைத்துள்ளதாக புகாா்தாரருக்கு தகவல் தெரிவித்துள்ளது.