திருநெல்வேலி

கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2,000 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர 3, 4ஆவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, மின் உற்பத்தி செய்வதற்காக சோதனைகளும், ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் 5, 6ஆவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 2ஆவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரத்தினா் தெரிவித்துள்ளனா்.

வெடிகுண்டு மிரட்டல்: இந்நிலையில், கூடங்குளம் காவல் ஆய்வாளரின் அலைபேசிக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து, கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் 2 அணு உலைகளுக்கும் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளதாம். இது குறித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT