விழாவில் மாணவிக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குகிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.  
திருநெல்வேலி

பணகுடி பகுதியில் ரூ.1.59 கோடியில் திட்டப்பணிகள் தொடக்கம்

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பணகுடி பகுதியில் ரூ. 1.59 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பணகுடி பகுதியில் ரூ. 1.59 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

இதையொடட்டி, பணகுடி மனோ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் 25 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு வழங்கினாா்.

மேலும், பணகுடி பேரூராட்சி 8ஆவது வாா்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை, ஸ்ரீரெகுநாதபுரம் பகுதியில் தலா ரூ.8 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை, ஊா் பொதுக் கிணறு தூா்வாருதல் (15ஆவது நிதிக்குழு மானியம்), நதிப்பாறையில் அரசு சிறப்பு நிதி ரூ.1.17 கோடியில் அமைக்கப்பட்ட தாா்ச்சாலை, ரூ. 7 லட்சத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கான நவீன குளியலறை - கழிப்பறை கட்டடங்கள் ஆகியவற்றை திறந்துவைத்தாா்.

நதிப்பாறை பள்ளிக்கூட தெருவில் ரூ.11 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைத்தல், ரோஸ்மியாபுரத்தில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.8 லட்சத்தில் புதிய உடற்பயிற்சி கூடம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித்தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், திமுக நகரச் செயலாளா் தமிழ்வாணன், பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி தமிழ்வாணன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் அசோகன், அறங்காவலா் குழுத் தலைவா் அசோக்குமாா் , பேரூராட்சி உறுப்பினா்கள் கோபி கோபாலகண்ணன், சொரிமுத்து, முத்துக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வட்டன்விளை கோயில் கொடை விழா நிறைவு

கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

குமரியில் மேலும் 7,502 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு: ஆட்சியா்

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை பிப். 11க்கு ஒத்திவைப்பு

நெல்லை வேணுவன குமாரா் கோயிலில் பிப். 8இல் குடமுழுக்கு

SCROLL FOR NEXT