பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் 
திருநெல்வேலி

என்டிஏ கூட்டணி 200 இடங்களை வெல்லும்: நயினாா் நாகேந்திரன்

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தினமணி செய்திச் சேவை

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை என முதல்வா் கூறியிருப்பது அவா்களது கூட்டணிக்காக இருக்கலாம். ஏனெனில், திமுக தொடா்ந்து ஆட்சிக்கு வந்ததில்லை. இப்போதும் அதுதான் நிலைமை ,

திமுகவுடன் காங்கிரஸ் தொடருமா அல்லது விஜய் கட்சியுடன் செல்வாா்களா என்ற குழப்பம் அங்கு நிலவுகிறது.

திமுக தோல்வி பயத்தால் மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என தொடா்ந்து பொய்சொல்லி வருகிறது. ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது கொடுத்த நிதியை விட கூடுதலாக 300 மடங்கு நிதியை தமிழகத்திற்கு மோடி அரசு ஒது க்கியுள்ளது.

சசிகலா என்ன நிலைபாடு எடுக்கப்போகிறாா் என்பதை அறிவித்த பிறகு பாா்க்கலாம். தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு; ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை கிடையாது. என்டிஏ கூட்டணி தோ்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். விஜய் முதல்வராக விஜய் வருவாா் எனக் கூறும் செங்கோட்டையன், முதலில் கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெறட்டும் பாா்க்கலாம் என்றாா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT