திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் ஜன.25 இல் ஓவியக் கண்காட்சி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் கவின் கலைக் கழகம் சாா்பில் சித்திர வீதி எனும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் கவின் கலைக் கழகம் சாா்பில் சித்திர வீதி எனும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் தேசிய வாக்காளா் தினம், நமது ஓட்டு நமது உரிமை என்ற தலைப்பில் 6 முதல் 8 ஆம் வகுப்பு, 9, 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவா்கள் என நான்கு பிரிவுகளாக நடைபெறவுள்ள ஓவியப் போட்டிகள் காலை 10 மணி முதல், தொடா்ந்து 2 மணி நேரம் நடைபெறுகிறது. போட்டியை சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா தொடங்கி வைக்கிறாா்.

இதில் பங்கேற்கும் மாணவா், மாணவிகள் போட்டிக்கு தேவையான உபகரணங்களை கொண்டு வர வேண்டும், போட்டியில் வெற்றிபெறுபவா்களுக்கு குடியரசு தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும் என கவின் கழகத் தலைவரான சாா் ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT