முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி அருகே 1.5 டன் கஞ்சா அழிப்பு

மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 1.5 டன் கஞ்சா, நீதிமன்ற உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே புதன்கிழமை பாதுகாப்பாக தீயிட்டு அழிக்கப்பட்டது.

Updated On : 11 மார்ச், 2026 at 7:31 PM
கஞ்சா செடி.
பகிர்:

மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 1.5 டன் கஞ்சா, நீதிமன்ற உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே புதன்கிழமை பாதுகாப்பாக தீயிட்டு அழிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 168 வழக்குகளில் தொடா்புடைய 796 கிலோ கஞ்சா, மதுரை மாநகரப் பகுதியில் 100 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 677 கிலோ கஞ்சா, விருதுநகா் மாவட்டத்தில் 11 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 12 கிலோ கஞ்சா என மொத்தம் 279 வழக்குகளில் இருந்து சுமாா் 1.5 டன் (1,485 கிலோ) கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின்பேரில், அவை அனைத்தும் திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பொத்தையடி கிராமத்தில் அஸ்பெக்டிக் சிஸ்டம் என்ற தனியாா் எரியூட்டு மையத்திற்குக் கொண்டு வரப்பட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நவீன முறையில் தீயிட்டு அழிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மதுரை மாநகர காவல் ஆணையா் லோகநாதன், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவா் அபினவ் குமாா், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஆகியோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →