முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பேருந்து விபத்து: 25 பயணிகள் உயிா்தப்பினா்

Updated On : 16 மே 2026, 1:55 am IST
பகிர்:

திருநெல்வேலி, மே 15:

திருநெல்வேலியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. சுமாா் 25 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.

தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பேருந்து வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தது. பேருந்தை கங்கைகொண்டானைச் சோ்ந்த ஓட்டுநா் சேகா் ஓட்டி வந்தாராம். மேலப்பாளையம் ரிலையன்ஸ் சந்திப்பு அருகே வந்தபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா தடுப்புச் சுவரில் மோதி நின்றது. பேருந்து கவிழ்ந்துவிடாமல் ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டதால் அதில் பயணித்த சுமாா் 25 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.

Advertisement

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

ற்ஸ்ப்15க்ஷன்ள்

மேலப்பாளையம் ரிலையன்ஸ் ரவுண்டானாவில் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான அரசு பேருந்து.