சாலை பாதுகாப்பு வார விழா
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சாலை பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.
தூத்துக்குடிசாலை பாதுகாப்பு வார விழா
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சாலை பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சாலை பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் நிறுவனமும், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு வார விழா ஸ்டெர்லைட் நிறுவனம் அருகேயுள்ள லாரி நிறுத்தும் இடத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, தூத்துக்குடி புறநகர் பகுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் நாராயணன் தலைமை வகித்தார். தொடர்ந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை காவல் துணைக் கண்காணிப்பாளர் நாராயணன் வெளியிட, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் தங்வேல் பெற்றுக் கொண்டார்.
ஸ்டெர்லைட் நிறுவன லாஜிஸ்டிக் பிரிவுத் தலைவர் பி.பி.மார்க்ஸ், சிப்காட் காவல் ஆய்வாளர் பி. கிருஷ்ணன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, லாரி ஓட்டுநர்களுக்கான பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் நிறுவன தலைமை மருத்துவ அதிகாரி கைலாசம் கலந்து கொண்டு லாரி ஓட்டுநர்களுக்கு சிகிச்சை அளித்தார்.
இதில், 200-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.