முகப்பு
தூத்துக்குடி

ஆழ்வார்திருநகரி காட்டுப் பகுதியில் இளைஞர் சடலம்

ஆழ்வார்திருநகரி அருகே காட்டுப்பகுதியில் கிடந்த இளைஞரின் சடலம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 13 மே 2013, 2:06 am IST
பகிர்:

ஆழ்வார்திருநகரி அருகே காட்டுப்பகுதியில் கிடந்த இளைஞரின் சடலம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 ஆழ்வார்திருநகரி அருகே மழவராயநத்தத்தைச் சேர்ந்த முத்து மகன் குமார் ( 37). இவர் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (30). திவ்யா (15) என்ற ஒரு மகளும், இசக்கி (9) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 நாள்களாக குமார் வீடு திரும்பவில்லையாம். அவரது கைப்பேசிக்கு தொடர்புக் கொண்டால், அனைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.

 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மழவராயநத்தம் காட்டுப்பகுதியில்  உள்ள கோவிலில் சாமி கும்பிட வந்த சிலர் விறகு எடுப்பதற்காக அருகில் இருக்கும் பாழடைந்த கிணறு அருகே சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதைந்த நிலையில் கிடந்த சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

Advertisement

 அவர்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் பட்டாணி(பொறுப்பு), உதவி-ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் போலீஸார் வந்து விசாரணை சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர்.   விசாரணையில் சடலமாக கிடந்தது குமார் என்பது தெரியவந்தது. சடலத்தின் அருகில் இருசக்கர வாகனம் ஒன்றும், குளிர்பானபாட்டிலும் பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்தது.  குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதாவது காரணமா என போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.