தூத்துக்குடி

சிவந்திப்பட்டியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

DIN

கோவில்பட்டியையடுத்த சிவந்திப்பட்டி கிராமத்தில் நாடார் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் 7 நாள்கள் நடைபெறும் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் தொடங்கியது.
இம்முகாமுக்கு கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஏ,பி.கே. பழனிசெல்வம் தலைமை வகித்து, முகாம் பணிகளை தொடங்கிவைத்தார். பள்ளிச் செயலர் எஸ்.ஆர். ஜெயபாலன் முன்னிலை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் கள்ளாண்டபெருமாள், உறவின்முறை சங்கச் செயலர் ராஜேந்திரபிரசாத், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். அதைத் தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இம்முகாமுக்கு பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோதிபாசு தலைமை வகித்தார். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் செல்வம் தலைமையில், திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT