தூத்துக்குடி

தூத்துக்குடி நூலகத்தில் முப்பெரும் விழா

DIN

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் நூலகர்கள் தின விழா, ஓய்வுபெற்ற நூலகர்களுக்கு பாராட்டு விழா, பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி உதவி ஆட்சியர் எஸ். சரவணன் கலந்துகொண்டு நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதனின் படத்தை திறந்து வைத்தார்.
மேலும், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு அவர் பரிசுகளையும், ஓய்வு பெற்ற நூலகர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி வானொலி நிலைய நிகழ்ச்சி பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை துறை தரக்கட்டுப்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் பழனி வேலாயுதம், மாவட் நூலக அலுவலர் ராம்சங்கர், நூலகர் சங்கரன், முத்துநகர் வாசகர் வட்டத் தலைவர் பால மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற நூலகர் தின விழாவுக்கு, கல்லூரி முதல்வர் அ. ஜாய்சிலின் ஷர்மிளா தலைமை வகித்தார். எழுத்தாளர் கமலாலயன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில், கல்லூரி (பொ) நூலகர் பொன்செல்வி, கல்லூரியின் நூலகக் குழு உறுப்பினர் சூர்யகலா, சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT