தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பயிர் சேத கணக்கெடுப்பு

DIN

ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு  உள்பட்ட பகுதிகளில் புயலால்  வாழை  உள்ளிட்ட பயிர் சேத கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக  வட்டாட்சியர் தாமஸ் பயஸ்  அருள் தெரிவித்தார். 
இது குறித்து அவர் மேலும் கூறியது:  ஒக்கி புயல் காரணமாக   ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குபட்ட பகுதிகளில் 2 ஓட்டு வீடுகள்  உள்ட்பட மொத்தம் 38வீடுகள் பகுதிவாரியாக சேதமாகின. மழையால் சேதமான வீடுகளின்  உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் வருவாய்த்துறையினர் மூலமாக சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு  உடனடியாக மாவட்ட  ஆட்சியரின்  உத்தரவின் பேரில்  ரூ.1லட்சத்து 58 ஆயிரத்து 700 வழங்கப்பட்டுள்ளது. 
இதைபோல், ஒக்கி புயலால் சேதமான வாழைகள் குறித்தும், நெல்  உள்ளிட்ட விவசாய பயிர்கள் குறித்தும் கிராம நிர்வாக  அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத்துறையினர் மூலமாக கணக்கெடுக்க  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக  அரசின் சார்பிலான நிவாரண  உதவிகள் தாமதமின்றி பெற்று கொடுக்கப்படும் என்றார்  அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT