தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் டிசம்பர் 29 மின்தடை
தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 29) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 29) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின்வாரிய செயற்பொறியாளர் தென்னரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி அருகேயுள்ள கொம்புகாரநத்தம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை, வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி. தளவாய்புரம், கொம்புகாரநத்தம், செட்டியூரணி, கல்லன் பரம்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, கீழதட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ். கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.