முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடல் பாசி உரம் தயாரித்தல் பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல்பாசியில் இருந்து திரவ உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல்பாசியில் இருந்து திரவ உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் உணவியல் மற்றும் தீவன நுட்பவியல் துறையின் சார்பில்,  "கடல்பாசியில் இருந்து திரவ உரம் தயாரித்தல்" பற்றிய ஒரு நாள் தொழிற்கல்வி பயிற்சி முகாம்  நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமின்போது, கடல்பாசிகள் என்றால் என்ன? கடல்பாசிகள் எந்த பகுதிகளில் சேகரிக்கப்படுகின்றன.? கடல்பாசியிலிருந்து திரவ உரம் எந்தெந்த முறைகளில் தயாரிக்கலாம்.?  கடல்பாசியிலிருந்து திரவ உரம் தயாரித்து அளிப்பதனால் ஏற்படும் நன்மைகள்,  கடல்பாசி உரம் எவ்வாறு சிறந்தது என்ற தலைப்புகளில் தொழில் நுட்ப வகுப்பு பயிற்சி வழங்கப்பட்டது.  கடல்பாசி திரவ உரம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.
பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் கோ.சுகுமார்,  பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.   ஏற்பாடுகளை மீன் உணவியல் மற்றும் தீவன நுட்பவியல் துறைத் தலைவர் சா. ஆதித்தன் செய்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →