தூத்துக்குடி

5இல் கோவில்பட்டியில் மெளன ஊர்வலம்

DIN

தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் இம்மாதம் 5ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெளன ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
 கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து தொடங்கும் மெளன ஊர்வலத்திற்கு அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகிக்கிறார். அதிமுக நகர, ஒன்றியச் செயலர்கள் மற்றும் ஜெயலலிதா பேரவை நகர, ஒன்றியச் செயலர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
 காந்தி மைதானத்தில் ஊர்வலம் நிறைவடைகிறது. அங்கு மேடையில் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.  தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலருமான கடம்பூர் செ.ராஜு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள காந்தி மைதானத்தை திங்கள்கிழமை  பார்வையிட்டு, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
 பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதாவிற்கு பின் கட்சியை மட்டுமின்றி, தமிழகத்தை வழிநடத்துவதற்கு வி.கே.சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் விருப்பத்தினை ஏற்று, சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT