தூத்துக்குடி

ரயிலில் அடிபட்டு ஆலைத் தொழிலாளி சாவு

DIN

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ரயிலில் அடிபட்டு ஆலைத் தொழிலாளி இறந்தார்.
கோவில்பட்டி ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக ரயில்வே நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர், வள்ளுவர் நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் பாலமுருகன் (21) என்பதும், இவர் கோவில்பட்டியையடுத்த நல்லியில் உள்ள நூற்பாலை தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயலும்போது இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT