தூத்துக்குடி

காயல்பட்டினம் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

DIN

காயல்பட்டினம் நகராட்சி சார்பில் எல்.கே. மேனிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர்  அறிமுகவுரையாற்றினார்.காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் உருவாகும் விதம் குறித்தும், அவை வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகள், வந்துவிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசிய அவர், இது தொடர்பாக காயல்பட்டினம் நகராட்சி எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்கு குறித்து நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உரையாற்றினார்.அனைத்து மாணவர்களும் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் - காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களால் டெங்கு கொசு ஒழிப்பு துப்புரவுப் பணி செய்யப்பட்டது.  பள்ளியின் உதவி தலைமையாசிரியர் செய்யித் முஹ்யித்தீன் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT