தூத்துக்குடி

பாஜக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

DIN

உடன்குடி,ஒன்றிய,நகர பாஜக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 ஒன்றியத் தலைவர் திருநாகரன் தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மை அணித் தலைவர் ஜெயம் செல்வராஜ், நகரத் தலைவர் கா.ஜெயக்குமார், நகரப் பொருளாளர் பொன்இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது, புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், பணமதிப்பு நீக்கம் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 இதில், மாநில வர்த்தக அணித் தலைவர் எ.என்.ராஜக்கண்ணன், மாவட்டச் செயலர் ரா.சிவமுருக ஆதித்தன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைப் படிவம் வழங்கப்பட்டது.
 இதில்,மூத்தத் தலைவர் கோமுத்துரை, ஒன்றிய அமைப்புச் செயலர்கள் அழகேசன், சிவந்திவேல், ஒன்றிய பொறுப்பாளர் பரமசிவன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் சதீஷ், ஒன்றியத் துணைத் தலைவர்கள் சங்கரகுமார் அய்யன், பசுபதி சிவசிங், ஒன்றியச் செயலர் அய்யப்பன், நகர துணைத் தலைவர் ஜவகர்லால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT