தூத்துக்குடி

தூத்துக்குடியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

DIN

தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் வரை 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. வறட்சி காரணமாக தற்போது குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகாரட்சி 33ஆவது வார்டுக்குள்பட்ட பாத்திமாநகர், புல்தோட்டம், பிவிஆர் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்து 22 நாள் ஆவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் ஜார்ஜ் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் காரணமாக ஜார்ஜ் சாலை பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தென்பாகம் காவல் ஆய்வாளர் ஜோசப் ஜட்சன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT