தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டை பள்ளி மாணவி மாநிலப் போட்டிக்கு தகுதி

DIN

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ காஞ்சி சங்கரா பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவிலான ஓட்டப்பந்தப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.  
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நிகழாண்டுக்கான உலகத் திறனாய்வுத் திட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில், 400 மீட்டர் ஓட்டத்தில் கொம்மடிக்கோட்டை ஸ்ரீ காஞ்சி சங்கரா பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6ஆம் வகுப்பு மாணவி மெஜர் அவிலா தெரஸா இரண்டாம் இடம் பெற்று, மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றார். இதையடுத்து மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவியை பள்ளிச் செயலர் சுந்தரலிங்கம், துணைச் செயலர் காசிஆனந்தம், பள்ளி முதல்வர் தேவிசுஜாதாராஜா, பள்ளி துணை முதல்வர் சிவரத்னா, உடற்கல்வி ஆசிரியை செல்வசோபியா, ஸ்ரீசங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வேல்ராஜன், கல்லூரி துணை முதல்வர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT