தூத்துக்குடி

சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டம்

DIN

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இளையரசனேந்தல் ஊராட்சிப் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி, பெண்கள் காலிக் குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளையரசனேந்தல் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க நீரோட்டம் உள்ள இடத்தில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். ஏற்கெனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகளை பழுது நீக்கி, தொட்டி  அமைத்து தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.
இளையரசனேந்தல் பெரியகுளம் கண்மாய் அய்யனார் கோயில் வடபுறம் உள்ள கிணற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளையரசனேந்தல் முக்கு ரோட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கோவிந்தராஜ், மகாராஜா, கண்ணன், பழனி, லிங்கசாமி, பாட்ஷா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் ரெங்கநாயகலு உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT