தூத்துக்குடி

மதிமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

கோவில்பட்டியில் நகர மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் பால்ராஜ் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் எல்.எஸ். கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ஜி. ரமேஷ் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், "கோவில்பட்டி தனிக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்; நகரில் உள்ள அனைத்து சாலைகளையும் பராமரிக்க வேண்டும்; கோவில்பட்டி மக்களுக்கு தேவையான தண்ணீர் விநியோகிக்க வேண்டும்; கோவில்பட்டியில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட ஹாக்கி மைதானத்தை திறக்க வேண்டும்; இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தை திறக்கவேண்டும். உணவு விடுதி, தேநீர் விடுதிகளில் பேப்பர் கப்புகள் பயன்பாட்டுக்குத் தடைவிதித்து, இலைகளைப் பயன்படுத்தும் நடைமுறை கொண்டுவர வேண்டும்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போதுமான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும். விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலைத் துறை துணைச் செயலர் பொன்ஸ்ரீராம், மேற்கு ஒன்றியச் செயலர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT