தூத்துக்குடி

706 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

DIN

கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட 3 பள்ளிகளில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 706 மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனிசெல்வம் தலைமை வகித்தார். நாடார் உறவின்முறை சங்கச் செயலர் ராஜேந்திரபிரசாத், பொருளாளர் செல்வராஜ், பள்ளிச் செயலர் ஜெயபாலன், பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செளந்திரநாயகி வாழ்த்திப் பேசினார். விழாவில், தமிழக அமைச்சர் கடம்பூர் செ.ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 406 மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், பாண்டவர்மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நாலாட்டின்புத்தூர் கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியில் 113 மாணவ, மாணவியருக்கும், கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 187 பேருக்கும் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சிகளில், பள்ளித் தலைமையாசிரியர்கள் சீத்தாமகேஸ்வரி (கழுகுமலை பள்ளி), சண்முகவடிவு (கே.ஆர். சாரதா பள்ளி), தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் மாணிக்கராஜா, அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, ராமச்சந்திரன், பொன்ராஜ், இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஈஸ்வரப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT