தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பத்ர தீபத் திருவிழா

DIN

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பத்ர தீப விழா நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு அம்மன் மற்றும் பூவனநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் உற்சவ மூர்த்தி சன்னதியில் வைக்கப்பட்டிருந்த பிரதான விளக்கில் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து, கோயில் வளாகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த 10,008 தீபங்களை பக்தர்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் அன்னக்கொடி, நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில், கயத்தாறு அகிலாண்டேஸ்வரி கோயில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரேஸ்வரி அம்மன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT