தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

DIN

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் எவ்வித காலதாமதமின்றி பொதுக் கழிப்பிடத்தை உடனடியாக கட்டித் தர வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.
கோவில்பட்டி நகராட்சி 5ஆவது வார்டுக்கு உள்பட்ட சங்கரலிங்கபுரம் பகுதி மக்களுக்கு பொதுக் கழிப்பிடம் கட்ட வேண்டும் எனக் கோரி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர்.
இந்நிலையில், பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முன்வரும் போது அப்பகுதியைச் சேர்ந்த சிலரின் தலையீட்டால் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எந்தவித கருத்து வேறுபாடுமின்றி பொதுக்கழிப்பிடம் கட்டும் பணி உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், பொதுக்கழிப்பிடத்தை விரைந்து கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதன் மூலம் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என வலியுறுத்தி 5ஆவது வார்டு பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலரும், முன்னாள் ராணுவவீரருமான முத்து தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.
பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் கண்ணபிரானிடம் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கலந்து பேசி தங்கள் கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT